கூட்டாலுமூட்டில்  சாலையில் ஜல்லி அகற்றும் போராட்டம்

கூட்டாலுமூட்டில்  சாலையில் ஜல்லி அகற்றும் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

கூட்டாலுமூட்டில்  சாலையில் பாஜக சார்பில் ஜல்லி அகற்றும் போராட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டம் பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கூட்டாலுமூடு சந்திப்பில் இருந்து மணியாரங்குன்றுக்கு சாலை செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் பழுதடைந்து, படுமோசமாக காணப்பட்டது. சாலையை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் ஒரு கோடி 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன் பின்னர் அடுத்த கட்டப் பணிகள் நடைபெறவில்லை.

தற்போது ஒருவருடமாகியும் பணி துவங்காததால் ஜல்லிகள் பெயர்ந்து ரோட்டில் நடந்து செல்பவர்களையும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் பதம் பார்க்கிறது. இந்நிலையில் இந்த சாலையை உடனடியாக சீரமைக்காக வலியுறுத்தி இன்று சாலையில் போடப்பட்டுள்ள ஜல்லிகளை அகற்றும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு முஞ்சிறை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் குமார் தலைமை வகித்தார். போராட்டத்துக்கு பாரதிய ஜனதாவினர் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஏராளம் பேர் குவிந்தனர். புதுக்கடை போலீசார் மற்றும் அதிகரிகள் பேச்சுவார்த்தை நடந்தினர்.

இதில் குறிப்பிட்ட தினத்துக்குள் சாலை சீரமைக்கப்படும் என எழுத்து பூர்வமாக ஒப்புதல் வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story