சாலையில் சிதறிய ஜல்லி கற்கள் - உடனடியாக களமிறங்கிய தூய்மை பணியாளர்கள் !

சாலையில் சிதறிய ஜல்லி கற்கள் - உடனடியாக களமிறங்கிய தூய்மை பணியாளர்கள் !

தூய்மை பணியாளர்கள்

காஞ்சி மாநகரில் பல கிலோமீட்டர் தூரம் சிதறிய ஜல்லிக்கற்கள்.விபத்தை தவிர்க்க துரிதமாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்
காஞ்சி மாநகரில் பல கிலோமீட்டர் தூரம் சிதறிய ஜல்லிக்கற்கள் விபத்தை தவிர்க்க துரிதமாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும் கல் குவாரிகளில் கட்டுமான பொருட்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து பல நூறு கணக்கான கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவ்வகையில் சிறு ஜல்லி எடுத்துச் சென்ற லாரியில் இருந்து கற்கள் காஞ்சிபுரம் நகர் சாலை முழுவதும் பல கிலோமீட்டர் தூரம் சிதறியவாறு சென்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் தூய்மை பணியாளர் உதவியுடன் சாலை ஓரம் சிதறி கிடக்கும் சிறு கற்களை ஒருங்கிணைத்து சுத்தப்படுத்தியும் விரைவாக பணி மேற்கொண்டதால் வாகன விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் இன்று அரசு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருவதால் அதற்காக பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் வருவோர் அதிகாலை தொழிற்சாலை பணிக்கு செல்வோர் என பலர் உள்ள நிலையில் இது போன்று செயல்களை செய்யும் கனரக வாகனங்களுக்கு அபராதம் இப்போது மட்டுமல்லாமல் இதற்கான சுத்தம் செய்யும் பணியின் செலவையும் ஏற்க வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இதுபோன்று கட்டுமான பொருட்களை விதிமுறைகளை மீறி கூடுதலாக ஏற்றி செல்வதாலே இது போன்ற சிதறல்களும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story