அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
மயான கொள்ளை நிகழ்ச்சி
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஊரல் குளக்கரையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழாவையொட்டி மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 21- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார மும் செய்யப்பட்டு சாமி வீதியுலா நடந்தது. அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அங்காளம்மன், பெரியாயி அம்மன், குறத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங் களும், அலங்காரமும் செய்யப்பட்டன. பின்னர் அங்காளம்மன் கத்தி, சூலம், கபாளம், ஈட்டி, சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங் களை 12 கைகளில் ஏந்தியவாறு சிறப்பு அலங்காரத்தில் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதில் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மன், குறத்தி, பாவடைராயன், காளி, கிருஷ்ணர் உள்ளிட்ட வேடமணிந்து மயானத்தில் படையலிட்டு வழிபட்டனர். அப்போது காய்கறிகள், பழங்கள், மலர்கள், நாண யங்கள் ஆகியவை அங்காளம்மன் மீது வாரி இறைக்கப்பட்டது.
அதனை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச்சென்றனர். இவ்விழாவிற் கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.