வெயில், மழையில் பணிபுரியும் போலீசாருக்கு பெரிய நிழற்குடை

வெயில், மழையில் பணிபுரியும் போலீசாருக்கு பெரிய நிழற்குடை

வெயில், மழையில் பணிபுரியும் போலீசாருக்கு பெரிய நிழற்குடை

தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவல்துறையினருக்கு உதவும் விதமாக பெரிய நிழற்குடை மற்றும் ரோந்து செல்லும் போலீசாருக்கு டார்ச் லைட் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் இன்று வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி, போக்குவரத்து பணி மற்றும் முக்கிய பந்தோபஸ்து பணி போன்றவற்றில் வெயில் மழை பாராமல் பணிபுரியும் காவல்துறையினருக்கு உதவும் வகையில் 125 பெரிய நிழற்குடைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா அவர்களிடம் நிழற்குடையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.

மேற்படி நிழற்குடைகளை ஆயுதப்படையில் வைத்து பராமரித்து மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் மேற்படி பாதுகாப்பு பணியின் போது வழங்கவும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் ரோந்து செல்லும் போலீசாருக்கு டார்ச் லைட் வழங்கி பாதுகாப்பாக பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அதனை பராமரித்து கையாள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story