மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி - தமிழ்நாடு பொருளாதாரம் கருத்தரங்கு
ஆட்சித்தலைவர் ஜெயசீலன்
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், நாளை காலை 10.30 மணியளவில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் தமிழ்நாடு பொருளாதாரம் என்ற தலைப்பில் 2024 -2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வரவு செலவு திட்ட அடிப்படையில் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியினை புரிந்து கொள்ளும் வகையில் 1000 கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 7-வது தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு 2024-2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வரவு செலவு திட்ட அறிக்கையினை அறிவித்தது.
அதன் அடிப்படையில், தமிழ் நாட்டின் பொருளாதாரம் குறித்து இந்த ஏழு தலைப்புகளில் பொருளாதாரப் பேராசிரியர்கள் உரையாற்றுகிறார்கள். அதன்படி திருநெல்வேலி அம்பை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் முனைவர் மூ.செல்லதுரை சமூக நீதி என்ற தலைப்பிலும், விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி இணை பேராசிரியர் பொருளாதாரத்துறை முனைவர் த.விஜயகுமார் கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு என்ற தலைப்பிலும், மதுரை மாவட்டம் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முனைவர் போ.முருகேசன் உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற தலைப்பிலும், மதுரை கல்லூரி இணை பேராசிரியர் மற்றும் பொருளியல் துறை தலைவர் முனைவர் சீ.தீனதயாளன் அறிவுசார் பொருளாதாரம் என்ற தலைப்பிலும், இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி இணை பேராசிரியர் மற்றும் பொருளாதார துறை தலைவர் முனைவர் சொ.சிதம்பரநாதன் சமத்துவ நோக்கில் மகளிர் நலம் என்ற தலைப்பிலும், திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உதவி பேராசிரியர் பொருளாதார துறை க அழகர்சாமி பசுமை வழி பயணம் என்ற தலைப்பிலும், மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை வணிகவியல் முனைவர் க.செல்லப்பாண்டியன் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.