திருவாரூர்: சிறப்பு குறைத்தீர் கூட்டம்
திருவாரூரில் ஜனவரி 4 ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமலையில் நடைபெற உள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இடம் இருந்து அவரவருக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனவரி 4ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்
Next Story