பச்சை பட்டினி விரதம் நிறைவு: வடக்காவிலிருந்து புனித நீர் வருகை

பச்சை பட்டினி விரதம் நிறைவு: வடக்காவிலிருந்து புனித நீர் வருகை

புனித நீர் 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அம்மனின் 28 நாள் பச்சைப்பட்டினி விரதம் நிறைவு நாளை முன்னிட்டு கொள்ளிடம் வடக்காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் பூச்செரிதல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் பூச்செறிதல் விழா மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான பூச்சொரிதல் விழா தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும் பாதையாத்திரையாகவும் பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு சாத்தி விட்டு சென்றனர். இந்த பூச்சொரிதல் விழா நாட்களில் அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நோய், நொடிகள் அணுகாது,சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் உலக நன்மைக்காகவும், மாயா சூரணை வதம் செய்த பாவம் நீங்கவும் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.மாசிமாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய்அம்மனின் பச்சைப் பட்டினிஇன்று நிறைவு பெறுகிறது. பச்சைப்பட்டினி விரதம் நிறைவு நாளை முன்னிட்டு கொள்ளிடம் வடக்காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் பூஜைகளுக்கு பிறகு அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

Tags

Next Story