பசுமை முதன்மையாளர் விருது தேர்வுக்குழு கூட்டம்

பசுமை முதன்மையாளர் விருது தேர்வுக்குழு கூட்டம்
பசுமை முதன்மையாளர் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக விருது தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது
விருதுநகரில் பசுமை முதன்மையாளர் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக விருது தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அளப்பறிய பங்களிப்பினை மேற்கொண்ட தனிநபர்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றோருக்கு ஆண்டுதோறும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதினை வழங்க கடந்த 26.10.2021 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டது. இவ்விருதில், விருதுநகர் மாவட்டத்திற்கு 3 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்க வேண்டி கடந்த 29.12.2023 அன்று நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டு, இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், இவ்விருதினைப் பெற 10 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவைகளிலிருந்து, பசுமை முதன்மையாளர் விருதிற்கு 3 நபர்கள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விருது தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்று, 3 நபர்களை தேர்வு செய்து தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். .

Tags

Next Story