காதலன் ஷாரோனை கொலை செய்யவில்லை நீதிமன்றத்தில் மறுத்த கிரீஷ்மா
களியக்காவிளை அருகே காதலன் ஷாரோனை கொலை செய்யவில்லை என நீதிமன்றத்தில் கிரீஷ்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
களியக்காவிளை அருகே காதலன் ஷாரோனை கொலை செய்யவில்லை என நீதிமன்றத்தில் கிரீஷ்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதி பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் களியக்காவிளையை சேர்ந்த கிரீஸ்மா என்ற இளம் பெண்ணுடன் ஷாரோனுக்கும் காதல் மலர்ந்தது. இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு ஷாரோன் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அன மதிக்கப்பட்டு அங்கு திடீரென மரணம் அடைந்தார். மகனின் மரணத்திற்கு கரிஷ்மா காரணம் என்று ஷா ரோனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில் ஷாரோனுக்கு அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்த தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்பொழுது கொலைக்கு உதவிய கிரிஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் அவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மூன்று பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிகை வாசித்து காண்பிக்கப்பட்டது. கிரீஸ்மா அவரது தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா என்று நீதிபதி பஷீர் கேட்டார். ஆனால் மூன்று பேரும் நாங்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறினார். அதைத்தொடர்ந்து சாட்சிகள் விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதி பஷீர் உத்தரவிட்டார்.
Next Story