கோயில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம்-கிறிஸ்தவ பெருமக்கள் வாழ்த்து
கோவில் கும்பாபிஷேக பேனர்
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயிலில் நடக்கும் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் வாழ்த்து சொல்லி வருவதால் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற வெள்ளிக்கிழமை அக்.27ல் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இதையொட்டி மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, அற்புதமான பேனர் ஒன்றை செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இஸ்லாமிய நண்பர் குழுவினர் வைத்துள்ளனர். அதில் தொப்புள் கொடி உறவுகளே.... என்ற வாசகம் மதத்தை தாண்டி உயிர் நேயத்தை இவ்வுலகிற்கு பறை சாற்றுகின்றது.
இதே போல கிறிஸ்தவ பெருமக்கள் ஆங்காங்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இதனால் திண்டுக்கல்லில் மத ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விளங்குகிறது என சமூக ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.