அரகண்டநல்லூரில் குறைகேட்பு முகாம்

அரகண்டநல்லூரில் குறைகேட்பு முகாம்
அரகண்டநல்லூரில் பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம் பேரூராட்சி கூட்டத்தில் முடிவு.
அரகண்டநல்லூரில் பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம் பேரூராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கஜிதாபிவி முன்னிலை வகித்தார்.

செயல் அலுவலர் முரளி வரவேற்றார், கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர். தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் ராயல் எஸ்.அன்பு பேசுகையில், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வருகிற 11-ந்தேதி மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடத்தி கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது, மேலும், பேரூராட்சி பகுதியில் அனைத்து தெருக்களிலும் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தெருக்களில் பெயர் பலகை அமைத்திடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, குமார், சரவணன், ரமேஷ்,, சுகிஜெரினா பேகம், வேம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி எழுத்தர் சுதாகர் நன்றி கூறினார்.

Tags

Next Story