குறைதீர் நாள் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த குறைதீர் முகாமில், 85 புகார் மனுக்கள் பெறபட்டன.

தர்மபுரி, ஜன.03: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த குறைதீர் முகாமில், 85 புகார் மனுக்கள் பெறபட்டது. 77 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் 46 புதிதாக மனுக்கள் பெறப்பட்டது. மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நில தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முகாமில்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார். ராமச்சந்திரன். நாகலிங்கம், மகாலட்சுமி. சிந்து. ஜெகநாதன், காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் சரவணன் அன்பழகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story