குறை தீர்க்கும் நாள் கூட்டம்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 353 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story