ஆட்சியர் உமா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (25.12.2023) 731.87 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 15.33 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உர வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமாவிடம்அளித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா.மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அ.வே.சுரேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் சு.துரைசாமி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ப.முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் கி.கணேசன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) கஇராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.