ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் சி.கமலநாதன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் வழங்க கோருதல், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க கோருதல், விடுப்பில் சென்ற நாட்களை முறைப்படுத்தி உத்தரவிடக் கோருதல், பணி காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பயன்கள் வழங்குமாறு கோருதல், சிறப்பு ஓய்வூதியம் வழங்க கோருதல், வீட்டு வாடகை படி வழங்கியதில் உள்ள வித்தியாசத் தொகை வழங்க கோருதல், மருத்துவ செலவுத் தொகை வழங்க கோருதல், தர ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்ட ஆணை நகல் வழங்க கோருதல், விடுப்பில் சென்ற காலத்திற்கு விடுப்பு கால ஊதியம் வழங்க கோருதல், திருத்தியமைக்கப்பட்ட ஓய்வூதிய பலன்கள் வழங்க கோருதல், பணிக்கொடை வழங்க கோருதல், குறைந்த பட்ச குடும்ப ஓய்வூதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் மனுவினை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். மேலும், ஓய்வூதியர்கள் அனைவரும் நம்மை போன்று பல்வேறு அரசுத்துறைகளில் நமக்கு முன்னர் பணி செய்தவர்கள் தான் என்பதை கருத்தில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் இந்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார்.

]இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), அபர்ணா தேவி, மாவட்ட கருவூல அலுவலர் கார்த்திகேயன், ஓய்வூதிய இயக்கக முதுநிலை கண்காணிப்பாளர் பி.ரிச்சர்ட் பேட்ரிக் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story