குறைதீர்வு கூட்டம்

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை குறு, சிறு நிறுவனங்களுக்கான குறைதீர்வுநாள் கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை குறு, சிறு நிறுவனங்களுக்கான குறைதீர்வுநாள் கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான குறைத்தீர்வு கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கினார். தொழில் மைய மேலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக ராணிப்பேட்டையில் இஎஸ்ஐ மருத்துவமனை தொழிலாளர்கள் நலன் கருதி விரைந்து திறக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பெல் தொழில் நிறுவனத்தை நம்பி மொத்தம் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில், பெல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முறையை ஒழுங்குப்படுத்த வேண்டும். அரக்கோணம் சிட்கோ தொழில்பேட்டையின் மனை பிரிவுகளின் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்தடை அறிவிப்புகளை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்பு தொழில் நிறுவனங்களுக்கு மின்வாரியம் சார்பில் தெரிவிக்க வேண்டும். தொழிற்சாலை வளாகத்தின் அருகே மது பிரியர்கள் மது அருந்துவதை தவிர்க்க மற்றும் குற்றச்செயல்களை தடுக்க காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர். இதுகுறித்து துறைச்சார்ந்த அலுவலர்கள் மூலமாக உரிய தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்தார். இதில், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்கள் என பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story