எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் - 34 மனுக்களுக்கு தீர்வு

X
குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்திள் 34 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, வழிகாட்டுதலின்பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், தலைமையில் (13.12.2023) இன்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், கலந்து கொண்டனர். இம்முகாமில் நிலுவையில் இருந்து 6 மனுக்களும், புதிதாக கொடுக்கப்பட்ட 28 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags
Next Story
