முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம்

முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் வருகிற 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் வருகிற 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாஅவது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் வருகிற 6-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளும் முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா், தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை தரைத் தளத்தில் பதிவு செய்து, 2 பிரதிகளாக அளிக்க வேண்டும் என்றாா்.

Tags

Next Story