சிவகங்கை: காவல்துறை குறைத்தீர் கூட்டம்
குறைத்தீர் கூட்டம்
சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 47 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் புகார் மனுக்கள் தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் ஆகியோர் தலைமையில் வாரந்தோறும் புதன்கிழமை மனு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் அதன் அடிப்படையில் பொதுமக்கள் மனு குறை தீர்ப்பு நாள் கூட்டம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 47 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story