கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தலைமையில் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தலைமையில் குறைகேட்பு கூட்டம்

ஆட்சியர் தலைமையில் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறைசார்ந்த 591 புகார் மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story