விருதுநகரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்
விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மற்றும் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிக்கா ன இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான மனுக்களை தேவையான ஆவணங்களுடன் (ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம்) இணைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், விருதுநகர். தொலைபேசி எண்: 04562-252068, தொடர்பு கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.