பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன, மேலும் புதிய மின் இணைப்புகள் கொடுப்பது தொடர்பாகவும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்தனர், மேலும் நுகர்வோரின் மனுக்களை பெற்று அதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில் விவசாயிகள் பலர், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுவினை மேற்பார்வை பொறியாளர் இடம் வழங்கினார்கள் இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அறிவிக்கப்படாத மின் வெட்டு என்பது தற்பொழுது, அதிகமாக்கிக் கொண்டு வருகிறது ஆகவே விவசாயம் செய்ய ஏதுவாக பகலில் ஆறு மணி நேரமும் இரவில் எட்டு மணி நேரமும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைத்திட, இலக்கீடு அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கையை தமிழக அரசுக்கும் மின்வாரியத்துறைக்கும் வலியுறுத்திய மனு அளித்தனர், மேலும் இதேபோன்று பல்வேறு மின் நுகர்வோர்கள் தங்களுக்கு உண்டான கோரிக்கை மனுவை கூட்டத்தில் வழங்கினார்கள். இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில், மின்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story