சேலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்வாரியம் 

சேலம் அன்னதானப்பட்டி தெற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story