கடலூரில் டிச.21ல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூரில்  டிச.21ல்  விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
X

 ஆட்சியர் அருண் தம்புராஜ்

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 21 ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயர் கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் அருண் தம்புராஜ் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது.

Tags

Next Story