திருப்பத்தூரில் மக்கள் குறைதீர் கூட்டம்
குறைதீர் முகாம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் பொது மக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். மேலும் வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் 291 என மொத்தம் மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு 5.3,500 மதிப்பிலான காதொலி கருவியை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.