குறை தீர்க்கும் நாள் கூட்டம் : எஸ் பி தலைமை

குறை தீர்க்கும் நாள் கூட்டம் : எஸ் பி தலைமை
X
குறைதீர்க்கும் நாள் கூட்டம் எஸ் பி தலைமையில் நடைபெற்றது
குறை தீர்க்கும் நாள் கூட்டம் எஸ் பி தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 16 நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளிடம் நேரடியாக தங்கள் குறைகள் குறித்தும் புகார்கள் குறித்தும் மனு அளித்தனர். அந்த மனுவை பெற்ற காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அந்த மனுவை அனுப்பி வைத்தார். மேலும் மாவட்டம் முழுவதும் பணிபுரியும் 13 காவலர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி எடுக்கப்பட்டது.

Tags

Next Story