தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம்

X
தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம்- மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 19 நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தல் பணிகள் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக வெளி மாநிலங்களைச் சார்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் மற்றும் செலவின பார்வையாளராக இந்திய வருவாய் பணி அலுவலரை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது. மேற்படி, விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நீலம் நம்தேவ் எண்: 9489985882 மற்றும் செலவின பார்வையாளராக ரதோஷியாம் ஜஜீ, தொடர்பு எண்: 9489985880 நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர்; மக்களவைத் தொகுதிக்கு ஸ்ரீஜித், (தொடர்பு எண்: 9489985881) ஒருங்கிணைந்த காவல்துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்களுக்கு 9489985882 என்ற கைபேசி எண்ணில் (அல்லது மின்னஞ்சல் முகவரி [email protected]) தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பொது பார்வையாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜ்குமார், வட்டாட்சியர், கைபேசி எண்: 7010795006 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விருதுநகர் பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்களிடம் காலை 11.00 மணி முதல் 12.00 வரை நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story
