பொன்னேரி அருகே குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்

பொன்னேரி அருகே குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்


பொன்னேரி அருகே நெடுஞ்சாலையில் குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தது.


பொன்னேரி அருகே நெடுஞ்சாலையில் குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தது.

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வை யில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகாமையில் அமைந்துள்ள பொன்னேரி பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடையில், திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுமார் 4 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமு தல் செய்து, சம்பந்தப் பட்ட கடைக்கு சீல் வைத்து 25,000 அபராதம் விதித்தனர். காரிமங்கலம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள், உணவு பாதுகாப்பு துறை நிர் வாகத்திடம் புகார் தெரிவிப்பதுடன். அதற்கான உருவாக்கப்பட்ட ஆன்லைன் மூலமாகவும் புகார் தெரி விக்கலாம் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பொதுமக்க ளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Tags

Next Story