புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் ரூ.14.31-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம்,கவுண்டன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்(23-24) ரூ.14.31-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஒன்றிய பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதி காளிமுத்து, கிளைச் செயலாளர் முருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story