நியாயவிலை கடை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா
அடிக்கல் நாட்டு விழா
வெங்காடம்பட்டி ஊராட்சியில் நியாயவிலை கடை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி அழகம்மாள் புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், ரேசன் கடைக்கு ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். இதில் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா ரவி, மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித், ஏ.பி..நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, ஐந்தாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி, வெங்காடம்பட்டி மன்ற செயலாளர் பாரத், அழகம்மாள்புரம், முத்தம்மாள்புரம், சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story