தரை தட்டிய சரக்கு கப்பல்

தரை தட்டிய சரக்கு கப்பல்

எகிப்தில் இருந்து 55 ஆயிரம் டன் உரம் ஏற்றி வந்த சரக்கு கப்பல் தூத்துக்குடி துறைமுகம் அருகே தரைதட்டி நின்றது; கப்பலை மீட்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எகிப்தில் இருந்து 55 ஆயிரம் டன் உரம் ஏற்றி வந்த சரக்கு கப்பல் தூத்துக்குடி துறைமுகம் அருகே தரைதட்டி நின்றது; கப்பலை மீட்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு பெட்டிகள் உரம் கரி மரத்தடி உள்ளிட்ட பொருட்களை சரக்கு கப்பல்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு எகிப்து நாட்டில் இருந்து ஜென் கோ பிடியேட்டர் என்ற சரக்கு கப்பல் சுமார் 55,000 டன் உரத்தை ஏற்றி வந்துள்ளது.

இந்தக் கப்பல் நேற்று காலை துறைமுகம் உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்பட்டது இதை தொடர்ந்து துறைமுக நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்லும்போது கடலில் தவறுதலாக ஆழம் குறைவான மேடான பகுதிக்கு கப்பல் சென்றதால் கப்பல் தரை தட்டி நின்றது இதை தொடர்ந்து இழுவை கப்பல் மூலம் துறைமுக ஊழியர்கள் தரைதட்டிய கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் உரம் இறக்குமதி செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி துறைமுகத்தில் உரம் ஏற்றி வந்த கப்பல் தரைதட்டி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story