Group- IV போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

Group- IV போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி – 4 (Group- IV) போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்பெக்ட்ரம் அகடாமி பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி – 4 (Group- IV) போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தேர்வு மையங்களில் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி– 4 (Group- IV) போட்டித்தேர்வு நாமக்கல், குமாரபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர், இராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 36,436 தேர்வர்கள் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் காலை 6 மணி முதல் செல்வதற்கு ஏதுவாக அனைத்து தேர்வு கூடங்களுக்கும் பேருந்து வசதி மற்றும் தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இத்தேர்வு பணிகளில் 12 பறக்கும் படைகள், 32 நடமாடும் குழுக்கள், 124 முதன்மை கண்காணிப்பாளர்கள், 7 கண்காணிப்பாளர்கள், 124 ஆய்வு அலுவலர்கள், 129 வீடியோகிராபர்கள் உட்பட கண்காணிப்பு குழுக்கள், மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 4 (Group- IV) போட்டித்தேர்வினை 30,864 (84.71 சதவீதம்) தேர்வர்கள் எழுதி உள்ளார்கள். 5,572 (15.29 சதவீதம்) தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.
Next Story