அரசு மருத்துவமனையில் விடிய காத்திருந்த காவலர்கள் மற்றும் நோயாளிகள்
தென்காசி மாவட்டம், பணவடலிசத்திரம் காவல் நிலைய காவல் துறையினர் பல்வேறு இருசக்கர திருட்டு வழக்கில் தேடப்படும் ஒரு நபரை தாழையூத்து அருகே நேற்று இரவு கைது செய்துள்ளனர், கைது செய்த கைதியை காவல் நிலையம் அழைத்து வரும் வழியில் காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி கைதியும் காவலரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இதையடுத்து சிகிச்சைக்காக நேற்று இரவு 11 மணியளவில் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கைதியும் காவலர்களும் அரசு மருத்துவமனை மருத்துவரானவர் பணி நேரத்தில் பணி செய்யாமல் ஓய்வறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால் காலை வரை சிகிச்சை அளிக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியில் இருக்கும் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதாகவே நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.