டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம்
பேராவூரணியில் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஐ.ஏ.எஸ்., தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம் ஜன., 12ல் நடக்கிறது.
சென்னை ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாதமியுடன், பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 'ழ' பவுண்டேசன் மற்றும் சென்னை எக்ஸ்மோல்டு பாலிமர்ஸ் நிறுவனம் இணைந்து, பெண்களுக்கான ஐ.ஏ.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம், வருகின்ற ஜன.12 ஆம் வெள்ளிக்கிழமை அன்று பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.
இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்துகின்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதிட விரும்பும் தேர்வர்களுக்காகவும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப் தேர்வுகளை எழுதிட விரும்பும் பெண் தேர்வர்களுக்காகவும், வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 'ழ' பவுண்டேசன் மற்றும் சென்னை எக்ஸ்மோல்டு பாலிமர்ஸ் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாட்டில் அரசுப் பணித்தேர்வில் எண்ணற்ற வெற்றியாளர்களை உருவாக்கிய சென்னை ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமி மாபெரும் வழிகாட்டும் முகாமினை நடத்துகின்றது. இதுகுறித்து, ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனர் சிபி.குமரன் பேராவூரணியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான இந்த வழிகாட்டும் முகாமில் ஐ.ஏ.எஸ் அலுவலர் பா.ராஜேந்திர சோழன், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் அலுவலர்கள் செந்தில் வேலவன், பிரகாஷ் உள்ளிட்ட அலுவலர்களும், குரூப்-1, குரூப்-2 பணிகளில் உள்ள அலுவலர்களும் கலந்து கொண்டு தேர்வர்களுக்கு வழிகாட்டுகின்றார்கள். தேர்வுக்கான திட்டமிடல், தேவையான பாட நூல்கள். நேர மேலாண்மை குறித்து தேர்வர்களின் சந்தேகங்களுக்கும் அரசுத்துறை அதிகாரிகள் பதிலளிக்கின்றனர்.
இந்த வழிகாட்டும் முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. சென்னையில் இருந்து ஆன்லைன் மூலமாக கட்டணமற்ற பயிற்சியளிக்கவும் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் மேலும் விவரங்களுக்கு 9025647209, 9150466341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்கு 'நாளை நான் ஐஏஎஸ்' என்ற புத்தகம் வழங்கப்படுகிறது" என்றார். அப்போது, வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தாளாளர் டாக்டர் ஆ ஜீவகன் அய்யநாதன், சென்னை எக்ஸ்மோல்டு பாலிமர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.