பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 

விருதுநகரில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகரில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில்,

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் இந்த உலக வாழ்க்கையை முடிக்கின்ற வரை வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.தேர்ச்சி பெறாத மாணாவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேரலாம்.

நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லுாரிகளில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம். நமது மாவட்டத்தில் 88 கல்லுாரிகள் இருக்கின்றன. தேர்ச்சி பெறும் அனைவருக்கும் கல்லுாரியில் இடம் உண்டு. வசதி வாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு வங்கிக் கடன், அரசு கல்வி உதவித்தொகை பெற வழிவகை உள்ளது.

அரசு திட்டங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு கூட நன்கொடையாளர்கள் மூலமாக உதவிகள் செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.நீங்கள் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு வருத்தப்பட வேண்டாம். தோல்வி என்பது நேற்றோடு முடிந்து விட்டது. நீங்கள் அடுத்த வெற்றிக்கான முதல் படியில் இருக்கிறீர்கள், இவ்வாறு பேசினார். முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, மாணவர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story