அரசு உயர்நிலைப்பள்ளி 100 % தேர்ச்சி

அரசு பள்ளி 100 % தேர்ச்சி
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அசத்தியுள்ளனர்.
அரசிராமணி குள்ளம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 55 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியளவில் நிதர்ஷனா 473 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், சுகந்தி, ஜோசிகா, அஜய் ஆகியோர் தலா 466 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மைனாதேவி 463 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவ, மாணவிகளை பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைகுழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
