குண்டுமல்லி விலை வீழ்ச்சி - பொதுமக்கள் மகிழ்ச்சி

குண்டுமல்லி விலை வீழ்ச்சி - பொதுமக்கள் மகிழ்ச்சி

 குண்டுமல்லி 

தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் குண்டு மல்லி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ குண்டுமல்லி 300 ரூபாய் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் நல்லம்பள்ளி அதியமான் கோட்டை, நார்த்தம்பட்டி, ஏலகிரி, சோலை கொட்டாய், காரிமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி,பழைய தர்மபுரி, வெண்ணாம்பட்டி,தடங்கம்,குள்ளனூர், கடகத்தூர்,குண்டல்பட்டி ,செட்டிக்கரை, மேல் ராஜா தோப்பு,போன்ற பகுதிகளில் விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட் இன்று மாலை கொண்டு வந்தனர். குண்டுமல்லி பூக்கள் அதிகரிப்பால் ஒரு கிலோ குண்டு மல்லி 300 ரூபாய், சன்ன மல்லி ஒரு கிலோ 270 ரூபாய், ரூபாய் கனகா மரம் 250 ரூபாய் காக்க நாம் பூ 160 ரூபாய், ரோஸ் ஒரு கட்டு 50 ரூபாய், ஜாதிமல்லி 150 ரூபாய் , பன்னீர் ரோஸ் 80 ரூபாய் அரளி ஒரு கிலோ 70 ரூபாய், கோலி கொண்டாய் 50 ரூபாய், சம்பங்கி 60 ரூபாய், செண்டுமல்லி 50 ரூபாய், சாமந்தி 60 ரூபாய்க்கும் பூக்கள் விற்பனையானது வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் குண்டுமல்லி விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story