கொலை வழக்கில் மேலும் இருவருக்கு குண்டாஸ்
குண்டாஸ்
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் ஏற்கனவே இருவர் குண்டர் சட்டத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த வீரபுத்திரனை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிள் கைதாகி சிறையில் உள்ளனர். இதில் இசக்கிபாண்டி, முத்துசெல்வம்,பாலாஜி ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ராம்,சூர்யா என்ற மகாராஜன் ஆகிய இருவரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story