மகா ராஜகணபதி கோயிலில் குரு பெயர்ச்சி விழா

நாகர்கோவில், அரசடி மகா ராஜகணபதி கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் மேல் ரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு அரசடி ஸ்ரீமகாராஜகணபதி திருக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
கணபதி ஹோமம், கலச பூஜை, அபிஷேகம், மஹா கலச அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை மகா தீபாராதனை அதனைத் தொடர்ந்து அன்ன பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் வள்ளலார் பேரவை மாநிலத் தலைவர் சுவாமி பத்மேந்திரா அருளுரை வழங்கினார்கள். விழாவினை ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தார்கள். பலன் பெறும் ராசிகள் மேஷம், மகரம், கடகம், கன்னி, விருட்சகம். மத்திம பலன் பெறும் ராசிகள் ரிஷபம், கும்பம், சிம்மம். பரிகாரம் செய்து பலம் பெறும் ராசிகள் மிதுனம், துலாம், தனுசு, மீனம் ஹாய் ராசிக்காரர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.
