கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனாகிய ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோயில் பல்லவ மற்றும் நூளம்ப மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும் நேற்று குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, குரு பகவான் நேற்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்ததை அடுத்து காலை 10:45 மணிக்கு குரு ப்ரீத்தியாகம், பக்தர்கள் சங்கல்பம் செய்து கொள்ளுதல் நடந்தது.
மாலை 4:15 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிஷேகம் நடந்தது மாலை 5 19 மணிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்ததை அடுத்து பரிகார ராசிகளான ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு மீனம் ஆகிய ராசிகளை சேர்ந்த பக்தர்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார பூஜைகள் செய்து கொண்டனர். தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் உதயகுமார் மற்றும் கோயில் செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் செய்து இருந்தனர்.