வைகாசி விசாக நாளில் குருபூஜை

வைகாசி விசாக நாளில் குருபூஜை

குரு பூஜை 

திருப்போரூர் சிதம்பர சுவாமிகளுக்கு வைகாசி விசாக நாளில் குருபூஜை நடைப்பெற்றது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை நிறுவிய,மதுரையைச் சேர்ந்த மீனாட்சி பக்தரான சிதம்பரசுவாமிகள், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில் வீர சைவ மடத்தை நிறுவி, திருப்போரூர் சன்னிதி பாடி, கந்தபெருமானுக்கு நித்ய பூஜைகளை செய்தார். மடத்திலிருந்து கந்தசுவாமி கோவிலுக்கும், பிரணவமலை கோவிலுக்கும் சுரங்கப்பாதை வழியாக சென்று, வழிபாடு நடத்தி வந்தார்.

தொடர்ந்து பூஜை செய்து வந்த அவர், 364 ஆண்டுகளுக்கு முன், மடத்தில் பூஜை செய்யும் போது, வைகாசி விசாக நாளில் ஜோதி வடிவில் மறைந்தார். அதை தொடர்ந்து, ஆண்டுதோறும் சிதம்பர சுவாமிகளின் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, 365வது குருபூஜை விழா, நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு சிதம்பர சுவாமிக்கு அபிஷேகம், தீபாரதனைகளும் நடந்தன. இன்று மாலை, வேம்படி விநாயகருக்கு 1,008 தேங்காய் உடைப்பு வைபவத்துடன், குருபூஜை விழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் குமரவேல் மற்றும் நிர்வாகத்தினர்செய்திருந்தனர்.

Tags

Next Story