பையூர் ஞானகுரு தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா
குருப்பெயர்ச்சி
விழுப்புரம் மாவட்டம், பையூர் ஞானகுரு தட்சிணாமூர்த்தி கோவில் குரு பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பையூரில் பிரசித்தி பெற்ற ஞானகுரு தட்சிணா மூர்த்தி கோவில் அமைந் துள்ளது. நேற்று மாலை குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்ததை யொட்டி குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று மதியம் 1.30 மணிக்கு விநாயகர் பூஜை, மஹா சங்கல்பம் கலச பூஜை, சங்கு பூஜை, குரு பரிகார யாகம், மகா பூர்ணாகுதி, பால் அபிஷகம் நடைபெற்றது. 3.30 மணிக்கு கலச மகா அபிஷேகம் நடந்து மகாதீபாராதனை நடைபெற் றது. அதன் பிறகு 12 ராசிகளுக்கும் அதிபதியாகவிளங்கக்கூடிய குருபகவானின், 12 அடி உயரமுள்ள சிலைக்கு கலச அபிஷே கம் 108 சங்காபிஷேகம் பரிகார யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story