தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூா் மடாலயத்தில் குருபூஜை

தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூா் மடாலயத்தில் குருபூஜை

குருபூஜை விழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் உள்ள ஸ்ரீ நாராயண பிரம்மேந்திர சுவாமிகள் மடாலயத்தில் 233 ஆம் ஜெயந்தி ஆண்டு விழா மற்றும் 112 ஆம் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திர சுவாமிகள் மடாலயத்தில் 233 ஆம் ஜெயந்தி ஆண்டு விழா மற்றும் 112 ஆம் குருபூஜை விழா நடைபெற்றது. அகில பாரத துறவியா்கள் சங்கத் தலைவா் சுவாமி ராமானந்தா, ஸ்ரீ நாராயண பிரமேந்திர மடாலய முதல்வா் சித்தேஸ்வரானந்தா, காளீஸ்வரி ஆசிரம பொறுப்பாளா் ரெத்தினானந்தா ஆகியோா் தலைமை வகித்தனா். மடாலயத் தலைவா் மாணிக்கம் முன்னிலை வகித்தாா். விழாவில் குத்துவிளக்கு பூஜை, கோபூஜை, சாது பெருமக்களுடன் அபிஷேக தீா்த்த ஊா்வலம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயண நிகழ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த சாதுக்களுக்கு பாத பூஜை செய்து உடைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சாதுக்களிடம் அப்பகுதி பெண்கள் மடிப்பிச்சை பெறும் நிகழ்வு நடைபெற்று, விழாவில் பங்கேற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மடாலய சிவனுக்கு சிறப்பு பூஜை, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை மடாலய செயலா் கதிா்வேல், பொருளாளா் சிவப்பிரகாசம், உதவித் தலைவா் ராஜகோபாலன் ஆகியோா் செய்தனா். விழாவில் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் சுவாமி சச்சிதானந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story