காரில் கடத்தப்பட்ட ரூ.3லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

தொப்பூரில் போலீசார் வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி கார் வந்தது. இந்த கார் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்ட மேடு பகுதியில் நேற்று இரவு வந்தது. அப்போதுபோலீசார் சம்பந்தப்பட்ட காரை நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது காரை நிறுத்திய டிரைவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட காரில் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அதில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உடனே போலீசார் குட்கா கடத்தி வந்த காரை பறிமுதல் செய்து தொப்பூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.காரின் பதிவெண் மூலம் கார் உரிமையாளர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி சென்றவர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். இதில் வேறுயாருக் கெல்லாம் தொடர்பு இருக் கிறது என்பது குறித்தும் தொப்பூர் காவல்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குட்கா மூட்டைகளுடன் கார் பறிமு தல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story