வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் !!
குட்கா புகையிலை
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் ஒருவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலையை கைப்பற்றி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் ஒருவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்காவீட்டில் விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது.புகாரை தொடர்ந்து பாப்பாக்குடி காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) நாக சுப்பிரமணியன் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலையை கைப்பற்றி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
Next Story