சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்
காவல் நிலையம்
கருப்பூர் மேம்பாலம் அருகே கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.
சேலம் கருப்பூர் மேம்பாலம் அருகே கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், தலைமையில் போலீசார் மகேந்திரன், குமார் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சரக்கு வாகன டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மெனு பேக் (வயது 24) என்பதும், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த டிரைவர் மெனு பேக் மற்றும் சரக்கு வாகனத்தை ஓமலூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவியிடம் ஒப்படைத்தனர்.
Next Story