580 கிலோ குட்கா பறிமுதல் - ஆந்திர வாலிபர்கள் கைது
குட்கா விற்பனை
வெள்ளவங்கோடு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட வெள்ளவேடு போலீசார், காவல்சேரி -- திருமணம் கிராம சாலையில், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 'அசோக் லேலண்ட் தோஸ்த்' வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட 95 கிலோ கூலிப், 196 கிலோ விமல், 37 கிலோ ஜல்தா, 252 கிலோ ஹான்ஸ் என, மொத்தம் 580 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. விசாரணையில், பெங்களூரில் இருந்து தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிந்தது.
குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திர மாநிலம், சித்துாரைச் சேர்ந்த ரவி, 28 மற்றும் சத்யராஜ், 23, ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
Next Story