குட்கா கடத்தல் : 34 கிலோ பறிமுதல், 3 பேர் கைது

குட்கா கடத்தல் : 34 கிலோ பறிமுதல், 3 பேர் கைது

பைல் படம் 

கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தில் குட்கா கடத்தி வந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 34 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணியரின் உடமைகளை சோதனை செய்தனர். சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சசிகுமார், 51, மாத்துார் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், 47, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரசிங், 24, ஆகிய மூவரிடம், 34 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story