குட்கா கடத்திய இளைஞர் கைது - 41 கிலோ குட்கா பறிமுதல்

குட்கா கடத்திய இளைஞர் கைது - 41 கிலோ குட்கா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

திருத்தணி அருகே ஆந்திராவிலிருந்து காரில் குட்கா கடத்தி வந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 41 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி பகுதி வழியாக தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனை சாவடியில் நேற்று திருத்தணி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் நகரி பகுதியிலிருந்து திருத்தணி மார்கத்தில் கார் ஒன்று வந்தது. அப்போது, காரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட சுமார் 41 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், கார் மற்றும் குட்கா, புகையிலை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருத்தணி அருகே மத்தூர் காலனியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் அன்பு(29) என தெரிய வந்தது. அன்பு பி.ஏ பட்டதாரி. குடி போதைக்கு அடிமையாகி ஆந்திராவிலிருந்து காரில் குட்கா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story