கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி

கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளின் தகவல்கள் பகிர்தலுக்கான ஹேக்கத்தான் போட்டி நடந்தது.  

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளின் தகவல்கள் பகிர்தலுக்கான ஹேக்கத்தான் போட்டி நடந்தது.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் புதிய கண் டுபிடிப்புகள் வளர்ச்சி மையம் மற்றும் இந்திய கல்வி அமைச்சகத் தின் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மன்றம் சார்பில் மாணவர்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளின் தக வல்கள் பகிர்தலுக்கான ஹேக்கத்தான்- 24 போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் யு.எஸ்.ரகுபதி முன் னிலை வகித்தார். புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி மையம் மற்றும் இயந்திரவியல் துறையின் தலைவர் எம்.ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை பகிர்தலுக் காக உருவாக்கம் செய்யப்பட்ட கணினி, மின்னியல் மற்றும் மின்ண ணுவியல், மின்னியல் மற்றும் மின்ணணுவியல் இல்லாத துறைகள் என மூன்று குழுக்கள் உருவாக்கிய 90-க்கும் மேற்பட்ட புதிய கண்டு பிடிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் பகிர்தலுக்காக காட்சிப்படுத் தப்பட்டிருத்தன.

தொழில்நுட்ப தகவல்கள், யோசனைகள் மற்றும் தந்திரங்களை பகிர்தலுக்காக காட்சிப்படுத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர் குழுக்களுடன் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பொறியியல் வல்லுநர்கள் சிறப்பு மதிப்பீட்டாளர்களாக கலந்துகொண்டனர். மதிப்பீட்டாளர்கள் அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்ற சிறந்த புதிய கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அவ்வாறு தேர்வு செய்யப் பட்ட புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story